/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
/
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 05:10 AM
சாத்துார் : சத்திரப்பட்டி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்து நகர் ஆனந்தா நகர் யோகமுத்து நகருக்கு நடுவில் கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாய் பாசனம் மூலம் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தொடர்ந்து கண்மாய் பராமரிக்க படாமல் கைவிடப்பட்டதால் தற்போது கண்மாய் முழுவதும் முள் செடி அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது.
பலத்த மழை பெய்யும் காலத்தில் இந்த கண்மாய்க்கு அதிக அளவு தண்ணீர் வருகிறது.ஓ மேட்டுப்பட்டி சடையம்பட்டி கண்மாயில் இருந்து வரும் மழைநீர் சத்திரப்பட்டி கண்மாயை வந்து அடைகிறது. மழைநீர் வரும் ஓடையில் சத்திரப்பட்டி குடியிருப்பு பகுதியில் இருந்துவரும் கழிவு நீரும், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலையின் கழிவு நீரும் கலப்பதால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் முழுவதும் மாசு அடைந்து கெட்டுப் போன நிலையில் உள்ளது.
தற்போது கண்மாய் பகுதியில் பலர் ஆடுகள் மேய்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்னர் கண்மாயில் உள்ள தண்ணீரை பருகுகின்றன. தீப்பெட்டி ஆலை கழிவுநீர் குடியிருப்பு கழிவுநீர் கண்மாயில் கலந்துள்ளதால் இதனை குடிக்கும் ஆடுகள் வாயில் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றன.
பல ஆடுகளுக்கு வயிற்று கோளாறும் சளி தொல்லை ஏற்படுகின்றது. இதனால் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

