ADDED : ஆக 09, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் புதிய மின் ரசாயன ஆற்றல் மாற்று ஆராய்ச்சி மையம் துவக்க விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் ஆராய்ச்சி மையத்தை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதி வாளர் வாசுதேவன் வாழ்த்தினர்.
திட்ட முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் சாம்சன் நேசராஜ் திட்டத்தின் நோக்கம், பயன்கள் குறித்து பேசினார்.
விழா ஏற்பாடுகளை ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன் செய்திருந்தார்.

