தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வசிப்பதோ விருதுநகர் மாவட்டம் அஞ்சல் பின்கோடோ சிவகங்கை

 வசிப்பதோ விருதுநகர் மாவட்டம் அஞ்சல் பின்கோடோ சிவகங்கை

 வசிப்பதோ விருதுநகர் மாவட்டம் அஞ்சல் பின்கோடோ சிவகங்கை


ADDED : டிச 16, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி டி.கடமங்குளம் பகுதிக்கு சிவகங்கை மாவட்ட அஞ்சல் பின்கோடு இருப்பதால் குழப்பம் ஏற்பட்டு, அரசு சலுகைகளை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

நரிக்குடி டி. கடமங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரண்டைகுளம், கிழவிகுளம், சீனிக்காரனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. ஆதார் கார்டில் சிவகங்கை மாவட்ட அஞ்சல் பின்கோடு நம்பர் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டு அரசு சலுகைகள் பெற முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக ரேஷன் கார்டு, அஞ்சல் அலுவலகம் சிவகங்கை மாவட்டத்துடன் இணைக்கப் பட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கார்டு சேவை மட்டும் விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. அஞ்சல் அலுவலகம் இன்னும் சிவகங்கை மாவட்ட கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. புதிய ஆதார் கார்டு சேவைகள், முகவரி சரிபார்ப்பு, திருத்தம், வாகனப்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இரு மாவட்டங்களை சார்ந்து இருப்பதால் குழப்பத்தில் வேதனை அடைந்தனர். அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us