ADDED : மார் 19, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் வார்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள், இதுவரை தாங்கள் பணியாற்றிய வார்டுகளுக்கு பதிலாக புதிய வார்டுகளில் பணியாற்ற இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனை ஏற்காத தூய்மை பணியாளர்கள் நேற்று காலை 8:00 மணிக்கு முத்தாலம்மன் பஜாரில் பணி செய்ய மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
