தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடியிருப்போர் குரல்

 குடியிருப்போர் குரல்

 குடியிருப்போர் குரல்


ADDED : மார் 18, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: மழைக்காலங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து விடும் கண்மாய் கழிவு நீர், பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகம், ரேஷன் கடைக்கு நீண்ட துார அலைச்சல், என சிவகாசி திருத்தங்கல் திருப்பதி நகரில் குடியிருப்போர் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதுகுறித்து திருப்பதி நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சுந்தரம்மாள், பி.ரத்தினம், லட்சுமி, வெள்ளைதுரைச்சி, என். ரத்தினம் கூறியதாவது, ஆலாவூரணி திருப்பதி நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அருகிலேயே உரிஞ்சிகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் முழுவதுமே கழிவுநீராக மாறிவிட்டது.

சிறிய மழை பெய்தாலும் கண்மாயிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் மக்கள் பல்வேறு தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்கள் திருத்தங்கல் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரேஷன் கடையில் சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள் நீண்ட துாரம் சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே இங்கேயே ரேஷன் கடைக்கு என புதிய கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2008 ல் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

சில வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்த சுகாதார வளாகம் தற்போது சேதமடைந்து வீணாக உள்ளது.

இதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் மின்சாரம் வசதி ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஒரு சில இடங்களில் தெரு விளக்குகள் பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடுகிறது.

தெருக்களில் சேதம் அடைந்துள்ள வாறுகால்களை சீரமைப்பதோடு துார்வார வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us