மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை, தேங்கும் கழிவுநீர்: சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் அவதி
மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம், புதர் மண்டிய ஓடை, தேங்கும் கழிவுநீர்: சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் அவதி
UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 04:24 PM

சாத்துார்: மண் மேவிய வாறுகாலால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி, மூடிக்கிடக்கும் பொது சுகாதார வளாகம்,புதர் மண்டிய ஓடை என எண்ணற்ற பிரச்சனைகளில் சாத்துார் அண்ணா நகர் குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர்.
அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் வேல்முருகன், செல்வக்குமார், மற்றும் பொன்ராஜ், மாரிக் கண்ணன், சுரேஷ், முனிஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:
அண்ணாநகர் குறுக்குத் தெருக்களில்பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறுகால்கள் துார்ந்து போன நிலையில் உள்ளன. வாறுகாலை சுத்தம் செய்யும் பணியாளார்கள் உடனடியாக கழிவு களை அகற்றி செல்வதில்லை இதனால் மீண்டும் குப்பை கழிவுகள் வாறு காலில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.
வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில் சிமெண்ட் காரை பூச்சி பெயர்ந்து கற்கள் கால்வாயில் விழுந்து வருகின்றன. இதனால் கழிவு நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.
அண்ணா நகர் தேவர் மகாலுக்கு செல்லும் வழியில் உள்ள வாறுகாலும் மண் மேவி கழிவுநீர் செல்லவில்லை. ல் பெரிய மழை பெய்தால் மட்டும் தண்ணீர் செல்கிறது.
அண்ணா நகர் நடுவில் உள்ள வாறுகாலில் கட்டடக் கழிவுகளையும் குப்பைகளையும் மக்கள் கொட்டுவதால் வாறுகால் மண், குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
அண்ணா நகரில் உள்ள மற்றொரு ஓடையில் முள் செடி புதர் போல வளர்ந்துள்ளது.இவற்றில் விஷ பூச்சிகள் தஞ்சம் அடைந்துள்ளன. பாம்பு தேள், பூரான், போன்ற விஷ பூச்சிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன. மழைக்காலத்திற்கு முன்பாக ஓடையில் உள்ள முள் செடிகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிட வேண்டும்.
திறந்தவெளி கழிப்பறையை ஒழிப்பதற்காக அண்ணா நகரில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் மோட்டார் பழுது எனக்கூறி அடிக்கடி நகராட்சி நிர்வாகம் பொது சுகாதார வளாகத்தை மூடி விடுகிறது. இதனால்் இயற்கை உபாதையை கழிக்க வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கிளை நுாலகம் அமைந்தால் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள்,போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் முதியவர்கள் நுாலகத்தை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
நகராட்சி விநியோகம் செய்யும் குடிநீர்கலங்கலாக வருகிறது. சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்., என்றனர்.
