தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலங்கலாக வரும் குடிநீர், புதர் மண்டிய ஓடை:அண்ணா நகர் குடியிருப்போர் அவதி

கலங்கலாக வரும் குடிநீர், புதர் மண்டிய ஓடை:அண்ணா நகர் குடியிருப்போர் அவதி

கலங்கலாக வரும் குடிநீர், புதர் மண்டிய ஓடை:அண்ணா நகர் குடியிருப்போர் அவதி


UPDATED : ஆக 18, 2026 05:07 PM

ADDED : ஆக 18, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 05:07 PM ADDED : ஆக 18, 2026 05:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்:கலங்கலாக வரும் குடிநீர் , புதர் மண்டிய ஓடையால் அண்ணா நகரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் வேல்முருகன், செல்வக்குமார், மற்றும் பொன்ராஜ், மாரிக் கண்ணன், சுரேஷ், முனிஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடியாதவது:

அண்ணாநகர் குறுக்குத் தெருக்களில்பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறுகால்கள் துார்ந்து போன நிலையில் உள்ளன. வாறுகாலை சுத்தம் செய்யும் பணியாளார்கள் உடனடியாக கழிவு களை அகற்றி செல்வதில்லை. இதனால் மீண்டும் குப்பை கழிவுகள் வாறு காலில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மெயின் வாறுகால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து வருகின்றன .இதனால் கழிவு நீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

இதில் கட்டடக் கழிவுகளையும் குப்பைகளையும் மக்கள் கொட்டுவதால் வாறுகால் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

மழைக்காலத்தில் மழை நீரும் மற்ற நேரங்களில் கழிவு நீரும் செல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

வீடுகளுக்கு குப்பைகளை வாங்க துாய்மை பணியாளர்கள் வந்த போதும் மக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை இந்தப் பகுதியில் உள்ள ஓடையில் கொட்டி வருவதால் ஓடையில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

அண்ணா நகரில் உள்ள ஒரு ஓடையில் முள் செடி புதர் போல வளர்ந்துள்ளது.இவற்றில் விஷ பூச்சிகள் தஞ்சம் அடைந்துள்ளன.பாம்பு தேள் பூரான் போன்ற விஷ பூச்சிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன.

மழைக்காலத்திற்கு முன்பாக ஓடையில் உள்ளமுள் செடிகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிட வேண்டும்.

திறந்தவெளி கழிப்பறையை ஒழிப்பதற்காக அண்ணா நகரில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.ஆனால் மோட்டார் பழுது எனக்கூறி அடிக்கடி நகராட்சி நிர்வாகம் பொது சுகாதார வளாகத்தை மூடி விடுகிறது.

இதனால் பெண்களும் ஆண்களும் இயற்கை உபாதையை கழிக்க வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

அண்ணா நகர் பகுதி வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தேவையான இடங்களில் கூடுதல் மின் விளக்குகள் அமைத்திட வேண்டும்.

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கிளை நுாலகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கிளை நூலகம் அமைந்தால் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள்,போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நுாலகத்தை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

நகராட்சி விநியோகம் செய்யும் குடிநீர்குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.துணி துவைப்பதற்கு பாத்திரம் கழுவுவதற்கு மே மக்கள் பயன்படுத்துகின்றனர்.வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ரூ 12 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலந்துரையாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us