தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்


UPDATED : நவ 24, 2026 04:44 PM

ADDED : நவ 24, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:44 PM ADDED : நவ 24, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாறுகால், குடிநீர், சுகாதார வளாக வசதிகள் இல்லை

* சிரமத்தில் ஸ்ரீவி. திருவண்ணாமலை பத்ரகாளியம்மன் நகர் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: வாறுகால், குடிநீர் , ரோடு, சுகாதார வளாக வசதிகள் இல்லாமல் 31 ஆண்டாக ,தினமும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சி பத்ரகாளியம்மன் நகர் மக்கள்.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் வேல்ராஜ், கோவிந்தராஜ், மகேஸ்வரன், சந்திரா, முருகேஸ்வரி கூறியதாவது;

திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் நகரில் 1995 முதல் மக்கள் குடியிருந்து வருகிறோம் .

ஸ்ரீவி.,நகராட்சிக்குட்பட்ட பெருமாள் பட்டி தெருவிற்கு செல்லும் தார் ரோட்டில் இருந்து பத்திரகாளியம்மன் நகருக்கு வரும் மெயின் ரோடு பல ஆண்டுகளாக போடப்படாமல் மண் ரோடாக இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் ப்ளாக் ரோடு அமைக்கப்பட்ட நிலையில் நடுவில் பேவர்ப்ளாக் ரோடு அமைக்கப்படாமல் மண் ரோடாக உள்ளது. இதே போல் எங்கள் குடியிருப்பு பகுதியில் பல்வேறு குறுக்குத் தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதிகள் பல ஆண்டுகளாக இல்லை.

இதிலும் தற்போது ஒரு சில தெருக்களில் வாறுகால் அமைத்த நிலையில் ரோடு போடாததால் மழை பெய்தால் சகதி ஏற்படும் நிலை உள்ளது.

2 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். ஆனால் சுகாதார வளாக வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆறோளாகி வருகின்றனர். மேலும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படாத நிலையில் தினமும் ஒரு குடம் குடிநீர் ரூ. 15 கொடுத்து தான் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

சமுதாயக்கூடம் இல்லாமல் எங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சிரமத்தை சந்தித்து வருகின்றோம். தற்போதைய எம்.எல்.ஏ.வும், ஊராட்சி ஒன்றியமும் மாவட்ட அரசு நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து எங்கள் குடியிருப்பு பகுதியில் முறையான ரோடு ,வாறுகால், குடிநீர், சுகாதார வளாக வசதிகளை செய்து தர வேண்டும் , இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us