UPDATED : மே 20, 2026 06:48 PM
ADDED : மே 20, 2026 06:25 PM
விருதுநகர்: பா.ஜ., அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு ஊழியர்களுக்கு 2026 ஜன. முதல் வழங்காத அகவிலைப்படி நிவாரணத்தை விடுவிக்கக் கோரி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் துணைப் பொது மேலாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.
ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்டச் செயலாளர் புளுகாண்டி தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சண்முகம், எஸ்.என்.பி.டபுள்யு.ஏ., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
தபால் ஊழியர்கள் சங்க சண்முகநாதன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் சம்பத்குமார், ஜெபக்குமார் பேசினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் குருசாமி பேசினார். பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.
