/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : செப் 04, 2025 11:58 PM

விருதுநகர்: வருவாய்த்துறை ஊழியர்கள், அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பணிகளால் கடுமையான வேலைப்பளு என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர பணி புறக்கணிப்புபோராட்டம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்தது.
மாவட்டம் முழுவதும் நேற்று 314 இச்சங்க உறுப்பினர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர் . 2 நாட்கள்பணி புறக்கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தின் காரணமாக மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்கள். ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடியது. இதனால் இறப்பு, வாரிசு, ஜாதி சான்றுகள் பெறுவதில்மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.