/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் இணையவழி சான்று பெற திண்டாட்டம்
/
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் இணையவழி சான்று பெற திண்டாட்டம்
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் இணையவழி சான்று பெற திண்டாட்டம்
வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் இணையவழி சான்று பெற திண்டாட்டம்
ADDED : பிப் 28, 2024 07:26 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில் இணைய வழி சான்று பெற மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி அல்லாதவர்களுக்கு பணி பாதுகாப்பு அரசாணை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தாசில்தார்களுக்கு புதிய ஜீப் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3ம் கட்ட போராட்டமாக பிப். 27 நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அதில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அனைத்து நிலை அலுவலர்களும் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினார்.
10 தாலுகா அலுவலகங்கள், 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக பிரிவுகள் ஆகியவை காலியாக காணப்பட்டன. இதனால் இணைய வழி சான்று பெற ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மக்கள் அங்குமிங்கும் அலைந்து திண்டாடினர்.

