/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் கண்மாயில் கனிமவளக்கொள்ளை தடுக்காத தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் வருவாய்த்துறையினர் போராட்டம்
/
விருதுநகர் கண்மாயில் கனிமவளக்கொள்ளை தடுக்காத தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் வருவாய்த்துறையினர் போராட்டம்
விருதுநகர் கண்மாயில் கனிமவளக்கொள்ளை தடுக்காத தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் வருவாய்த்துறையினர் போராட்டம்
விருதுநகர் கண்மாயில் கனிமவளக்கொள்ளை தடுக்காத தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் வருவாய்த்துறையினர் போராட்டம்
ADDED : பிப் 14, 2025 01:57 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்காத தாசில்தார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.டி.ஓ.,விடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தி வருவாய்த்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் ஜன. 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இதில் கனிமவளக் கொள்ளை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன், துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ., அஜீதா, கிராம உதவியாளர் குருசாமி, நீர்வளத்துறை உதவி பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மண் அள்ளியது தொடர்பாக தாசில்தாருக்கு தொடர்ந்து அறிக்கைகள் சென்றுள்ளதாகவும், தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விதிமீறலை கண்டறிய தவறிய சாத்துார் ஆர்.டி.ஒ., சிவக்குமாரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 10 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் தரப்பில் கூறுகையில்,
'நவம்பரில் நடந்த முதல்வர் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்காக மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் இதே இடத்தில் மண் எடுக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்கிறது. அரசியல், அதிகாரிகள் நெருக்கடியால் தான் தொடர்ந்துள்ளது. தற்போது திடீரென பழிவாங்கும் நடவடிக்கையாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்டை திரும்ப பெறாவிட்டால் சான்று வழங்கும் பணியும் நிறுத்தப்படும், என்றனர்.
வேளாண் உதவி அலுவலருக்கு ஒரு மாதம், அதுவும் மாற்றுப்பணியாக மட்டுமே ஒதுக்கப்பட்டது.
அவருக்கும் மணல் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை உதவி வேளாண் அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததாக சங்க நிர்வாகிகள் கூறினர்.