ADDED : நவ 13, 2026 04:33 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில் நேற்று (நவ.,12) மைக்கேல் ராஜ் என்பவரிடம், அவரது வீட்டு சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, நகராட்சி வருவாய் ஆய்வாளர்
ஹென்றி டேவிட் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவே ஸ்ரீவில்லிபுத்துார்
முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கந்தகுமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்தனர்.
