ADDED : ஜன 25, 2026 06:15 AM

நரிக்குடி: பனைக்குடி பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நரிக்குடி, பனைக்குடி, எஸ்.மறைக்குளம், தேனூர் குமிழாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நெல் விவசாயம் நடைபெறும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. இதைய டுத்து வயல்களை பக்குவப்படுத்தி நெல் நடவு செய்தனர். களை எடுத்து, ஓரளவிற்கு வளர்ந்து பால் பிடிக்கும் சமயத்தில், எதிர்பார்த்த அளவு மழை கிடையாது. அதற்குப் பின் நீர் நிலைகளில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி விளைய வைத்தனர்.
தற்போது நெல் மணிகள் நன்கு விளைந்து கதிர் முற்றியது. ஒரு சில இடங்களில் பனிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தரையில் சாய்ந்தன. இருந்தாலும் அறுவடைக்கு தயாராகின. இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடை செய்யப்பட்டு நெல் மணிகளை பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவர். அதிக செலவு நெல் நடவு செய்ததற்கு நல்ல பலன் கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
