/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
/
பாலங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
பாலங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
பாலங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மே 30, 2025 03:09 AM

மாவட்டத்தில் நகர், கிராமப் பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மட்டுமல்லாதுஅனைத்து பகுதிகளிலும்உள்ள ரோடுகளில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட பெரும்பான்மையான பாலங்களில் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாலங்களில் இருந்த தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது.
மேலும் பெரும்பான்மையான பாலங்களில் தடுப்புச் சுவர் இல்லை. இதனால் எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிசெல்வதிலும் மிகவும் சிரமம் ஏற்படுகின்றது. தவிர கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பாலத்தில் தடுப்புசுவரில் மோதுவதால் பெரிய இழப்பு தடுக்கப்படும்.
அவ்வாறு தடுப்பு சுவர் இல்லை என்றால் வாகனங்கள் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விட வாய்ப்புஉள்ளது. மேலும் தண்ணீர்இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புஉள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி வரும் வாகனங்கள் மட்டும் கவனமாக சென்று விடலாம்.
ஆனால் புதிதாக வருபவர்கள் இதனை கவனிக்காமல் விபத்து அபாயத்தில் சிக்குகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் வளைவுகளில் தடுப்பு வைப்பதோடு அடையாளமும் ஏற்படுத்த வேண்டும். இப்பகுதிகளில் தெரு விளக்குகளும் ஏற்படுத்த வேண்டும்.
பாலங்களில் கண்டிப்பாக தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.