ADDED : ஜூன் 10, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே உள்ள பண்ணை மூன்றடைப்பில் ரேஷன் கடை உள்ளது. 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ஒரு மாதமாக ரேஷன் கடை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று கடை திறந்த நிலையில் பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் குறிப்பிட்ட ரேஷன் பொருட்கள் தான் வழங்க முடியும் என கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மக்கள் ரேஷன் கடை அருகில் உள்ள பண்ணை மூன்றடைப்பு -கட்டங்குடி ரோட்டில் மறியல் செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள், ரேஷன் கடையை முறையாக திறப்பது இல்லை. இதனால் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகிறோம் என்றனர்.-