நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று முன்தினம் ஆட்டோ மோதி ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் நேற்று மதியம் 12:35 மணிக்கு அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கொலை வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என விளக்கம் அளித்தார். இதனையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.