ADDED : பிப் 08, 2025 04:42 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் இருந்து விஸ்வநத்தம் செல்லும் ரோடு கதிரடிக்கும் களமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் காயல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றது. பயிர்களை பிரித்தெடுப்பதற்கு இப்பகுதியில் கதிரடிக்கும் களம் இல்லை.
இதனால் இப்பகுதி விவசாயிகள் வேறு வழியின்றி ரோட்டையே கதிரடிக்கும் களமாக பயன்படுத்துகின்றனர். இதற்காக செடிகளை அப்படியே நடு ரோட்டில் போட்டு விடுகின்றனர்.
வாகனங்கள் பயிர்கள் மீறி ஏறிச் செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய பாலத்தில் போட்டு விடுகின்றனர்.
இதனை எந்த வாகனமும் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களில் செடிகள் சிக்கி பழுதடைகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.