எதிர்கோட்டையில் குழாய் உடைந்து குடிநீர் வீண், சேதமாகும் ரோடு
எதிர்கோட்டையில் குழாய் உடைந்து குடிநீர் வீண், சேதமாகும் ரோடு
ADDED : ஆக 22, 2026 05:01 PM
சிவகாசி, ஆக. 23 -
வெம்பக்கோட்டை ஒன்றியம் குண்டாயிருப்பிலிருந்து எதிர்கோட்டை செல்லும் வழியில் பதிக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் ரோடு மோசமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர் கோட்டையில் உள்ளூர் போர்வெல் மூலமாக மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதியினருக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக குண்டாயிருப்பிலிருந்து எதிர்கோட்டை செல்லும் வழியில் உள்ள கண்மாயில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிருந்து வருகின்ற குழாய் இரு இடங்களில் அடுத்தடுத்து உடைந்து குடிநீர் முழுமையாக வீணாகிறது. தவிர குழாய் உடைந்த இரு இடங்களிலும் ரோடும் மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதில் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. எனவே குழாய் உடைப்பினை சரி செய்வதோடு சேதம் அடைந்த ரோட்டையும் சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
