ADDED : டிச 25, 2024 04:23 AM

சிவகாசி : தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையில் ரூ.94 லட்சத்தில் ரோடு அமைக்கும் பணி துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்துார் -- பார்த்திபனுார் ரோடு, சிவகாசி ஆலங்குளம் ரோட்டை இணைக்கும் பெரியகுளம் கண்மாய் கரை ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் செல்லாமல், இந்த ரோடு வழியாக மாற்றி விடப்பட்டது.
ரூ.94.75 லட்சத்தில் மதிப்பில் 1.4 கி.மீ துார பெரியகுளம் கண்மாய் கரையில் புதிய தார் ரோடு அமைக்க செப். 18ல் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கி சில நாட்களில் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.
எனவே உடனடியாக ரோடு அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரோடு அமைக்கும் பணி மீண்டும் துவங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

