/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை
/
ரோடு வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஜன 06, 2026 05:52 AM

சிவகாசி: தெருக்களில் ரோடு வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை என திருத்தங்கல் அருகே செங்கமலப்பட்டி ஜேஜே நகர், அசேபா நகர், முருகன் காலனி, பிள்ளையார் கோயில் தெரு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
செங்கமலப்பட்டி ஜேஜே நகர், அசேபா நகர், முருகன் காலனி பகுதிகளில் தெருக்களில் ரோடு வாறுகால் சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. செங்கமலப் பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
பிள்ளையார் கோயில் தெரு செல்லும் விலக்கில் ரோட்டோர மின்கம்பம் சேதமடைந்துள்ளது. விபத்து அபாயத்தில் உள்ள இதனை மாற்றி அமைக்க வேண்டும். மெயின் ரோட்டில் வாறுகால் துார் வாரப்படவில்லை. விவசாய நிலங்களில் நடமாடும் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதியிலும் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிள்ளையார் கோயில் தெரு விலக்கில் சமீபத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் கதவுகள் சேதம் அடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.
கேசவன், தொழிலதிபர்: பிள்ளையார் கோயில் தெருவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளியப்பன், தனியார் ஊழியர்: அசேபா காலனியில் தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தெருவில் தேங்கி விடுவதால் நடந்து செல்வதே பெரும் சிரமமாக உள்ளது.
அய்யனார், தனியார் ஊழியர்: ஜேஜே காலனி, முருகன் காலனியில் வாறுகால் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழி இல்லை. எனவே வாறுகாலினை துார் வருவதோடு சீரமைக்க வேண்டும்.

