ADDED : டிச 23, 2024 04:36 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோயில் ரோடு, ரத வீதி ரோடு சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் செங்கமல நாச்சியார்புரம் வழியாக திருத்தங்கல் செல்லும் ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. நகர் பஸ்கள் கனரக வாகனங்கள் பள்ளி கல்லூரி பஸ்கள் என அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வந்து தான் விருதுநகர், சிவகாசிக்கு செல்கின்றன.
திருத்தங்கல் தேவர் சிலை அருகே செங்கமல நாச்சியார்புரம் ரோடு, ரத வீதி, மாரியம்மன் கோயில் ரோடு சேதம் அடைந்துள்ளது. மாற்றுப்பாதையாக உள்ளதால் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும் இந்த ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதியில் சேதமடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.