/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் இல்லை சிவகாசி ராஜதுரை நகர் குடியிருப்போர் அவதி
/
தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் இல்லை சிவகாசி ராஜதுரை நகர் குடியிருப்போர் அவதி
தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் இல்லை சிவகாசி ராஜதுரை நகர் குடியிருப்போர் அவதி
தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் இல்லை சிவகாசி ராஜதுரை நகர் குடியிருப்போர் அவதி
ADDED : ஜூன் 04, 2025 12:42 AM

சிவகாசி: தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் வசதி இல்லை என சிவகாசி ஆனையூர் ஊராட்சி ராஜதுரை நகர் குடியிருப்போர் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இது குறித்து ராஜதுரை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பொன்ராஜ், வெங்கடேசன், மகாலட்சுமி, ஜோதி, ஜான்சி ராணி கூறியதாவது: ராஜதுரை நகர் செல்லும் மெயின் ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. இங்குள்ள அனைத்து தெருக்களிலுமே ரோடு வாறுகால் வசதி இல்லை. சிறிய மழை பெய்தாலும் மண் ரோடாக உள்ள தெரு முழுவதுமே சகதியாக மாறிவிடுகிறது.
இதனால் சைக்கிள், டூவீலரில் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் இல்லை. இப்பகுதியில் தெரு விளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது.
காலி மனைகளில் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது.
இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுகின்றது.
தவிர அவ்வப்போது திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. ராஜதுரை நகருக்கு வருகின்ற மெயின் ரோட்டில் குடிமகன்கள் மது பாட்டில்கள் வாங்கி வந்து இங்கேயே மது அருந்துகின்றனர்.
மேலும் காலி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை ரோட்டிலேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.
மேலும் தகாத வார்த்தை பேசிக்கொண்டு சண்டை போடுகின்றனர். இதனால் பெண்கள் தனியாக சென்று வர முடியவில்லை. எனவே போலீசார் கண்காணிப்பு அவசியமாகிறது, என்றனர்.