/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் ரோடு விரிவாக்க பணி துவக்கம்
/
காரியாபட்டியில் ரோடு விரிவாக்க பணி துவக்கம்
ADDED : டிச 13, 2025 06:02 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ரோடு விரிவாக்க பணி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காரியாபட்டியில் முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை ரோட்டோர ஆக்கிர மிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. வாகன போக்கு வரத்து அதிகரித்து வந்ததால் நாளுக்கு நாள் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு விரி வாக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டது. விருதுநகர் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நெடுஞ் சாலைத் துறை மூலம் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பஜாரிலிருந்து திருச்சுழி முக்கு ரோடு வரை ரோடு விரிவாக்க பணிகள் துவக்கப்பட்டது.
விரிவாக்க பணியில், ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து 3 மீட்டர் தூரம் அகலப் படுத்தி, நெடுஞ்சாலைத்துறை எல்கை வரை பேவர் பிளாக் கற்கள் பதிக்க பணிகள் நடைபெற உள்ளது.
ஆக்கிரமிப்பாளர் களுக்கு ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், பெரும்பாலானவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதில் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இருந்த விநாயகர் சிலையும் அகற்றப்பட்டது.

