/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு
/
புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு
ADDED : அக் 07, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய குடியிருப்பு பகுதிகளான மகாத்மா நகர், துர்கா நகர், டி.வி.எஸ்.ஜெ.ஜெ. நகர் உட்பட பல்வேறு தெருக்களில் நீண்ட காலமாக ரோடு வசதி இல்லாமல் மக்கள் மழை நேரங்களில் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 95 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக நடந்த பூமி பூஜையில் எம்.எல்.ஏ மான்ராஜ் பணிகளை துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.