/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் 15 ஆண்டுகளுக்குப்பின் போடப்பட்ட ரோடு
/
திருத்தங்கலில் 15 ஆண்டுகளுக்குப்பின் போடப்பட்ட ரோடு
திருத்தங்கலில் 15 ஆண்டுகளுக்குப்பின் போடப்பட்ட ரோடு
திருத்தங்கலில் 15 ஆண்டுகளுக்குப்பின் போடப்பட்ட ரோடு
ADDED : செப் 07, 2025 02:41 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 21 வது வார்டு முனீஸ் வரன் காலனியில் 15 ஆண்டுகளுக்குப் பின் ரோடு அமைக்கப்பட்டதால் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிவகாசி மாநகராட்சி 21 வது வார்டு திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. பெரும்பான்மையான தெருக்களில் ரோடு போடப்பட்ட நிலையில் 3வது தெருவில் ரோடு போடப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு 3வது தெருவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
15 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக முனீஸ்வரன் காலனி 3 வது தெருப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தனர்.
மேலும் புது ரோடு வந்ததற்கு நன்றி என எழுதப்பட்ட கேக்கினை வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
அதே நேரம் சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.