/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன நிறுத்தமாக ரோடுகள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
/
வாகன நிறுத்தமாக ரோடுகள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
வாகன நிறுத்தமாக ரோடுகள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
வாகன நிறுத்தமாக ரோடுகள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
ADDED : டிச 06, 2024 05:07 AM

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட், பாவாலி ரோட்டின் ஓரங்களில் வாகனங்கள் பார்க்கிங் பகுதியாக மாற்றியுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் விபத்து அபாயத்துடன் சென்று வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகருக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவ சிகிச்சைகள், வியாபாரிகள் என பலரும் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
இவர்கள் அரசு, தனியார் பஸ்களில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த இடமாகவே உள்ளது. இதில் பழைய பஸ் ஸ்டாண்ட், பாவாலி ரோட்டின் ஓரங்களில் வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்களுக்கு வாகனங்களில் வருபவர்கள் ரோட்டின் ஒரத்தில் நிறுத்துகின்றனர்.
இப்படி நிறுத்தும் வாகனங்களால் பஸ்கள், ஆம்புலன்ஸ் முன்னேறி செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. வளைவு பகுதிகளில் நிறுத்தி செல்வதால் சக வாகன ஓட்டிகள் பரிதவிப்பிற்கு ஆளாகின்றனர். இதனால் காலையில் அவசரமாக பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி வருவதால் காலை முதல் மாலை வரை நகர்பகுதி ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் ஆர்வத்தில் பாதிக்கூட இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் காட்டுவதில்லை. எனவே விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட், பாவாலி ரோட்டின் ஓரங்களில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.