சருகுகளில் தீ வைப்பதால் ரோட்டோர மரக்கன்றுகள் பாழ்
சருகுகளில் தீ வைப்பதால் ரோட்டோர மரக்கன்றுகள் பாழ்
ADDED : ஏப் 15, 2026 11:28 PM

விருதுநகர்: விருதுநகர் பகுதிகளில் சருகுகளில் தீ வைப்பதால் ரோட்டோரங்களில் நட்ட மரக்கன்றுகள் பாதிப்பை சந்திக்கின்றன.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இலையுதிரும். மேலும் தற்போது வெயிலின் தாக்கம் 104 பாரன்ஹீட்டை தாண்டுவதால் மக்கள் கடும் அச்சத்தில் வெளியில் நடமாடுகின்றனர். இந்நிலையில் காய்ந்த சருகுகள், புற்கள் அதிகரித்து விட்டன.
கிராமங்களில் ஒதுக்குப்புறமாக மது அருந்தும் குடிமகன்கள் புகைப்பிடிக்கும் போது அந்த நெருப்பை ரோட்டோரங்களில் போட்டு விட்டு செல்வதால் தீப்பற்றுகிறது. வேறு சில மர்மநபர்கள் தீய எண்ணத்துடன் வைப்பதாலும் நிகழ்கிறது. இதனால் மரக்கன்றுகள் பாழாகி விடுகின்றனர். விருதுநகர் மீசலுார் அழகாபுரியில் இரையநாயக்கர்
நகர்ப்புறங்களில் மக்கள் கவனிக்காத நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில், டிரான்பார்மர் உள்ள பகுதிகளில் அடிப்புறங்களில் உள்ள சருகுகளை சிலர் தீ வைத்து அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கின்றனர். மேலும் தற்போது கோடை காலம் தீ நின்று எரியும் அபாயம் உள்ளது. எனவே குப்பை, சருகுகளை எரிப்பதை பொதுமக்களே தாங்களாகவே நிறுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
