ADDED : செப் 20, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் விருதுநகர் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் செயலாளர் நிரோஜன் துவக்கி வைத்தார்.
மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் தலைவர் நந்தகோபால் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.