நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சாத்துார் - விருதுநகர் ரோட்டை இணைக்கும் ரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.
எனவே இன்று(டிச. 10) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அந்த ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

