ADDED : ஏப் 13, 2026 12:58 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், பெருங்குடி கஸ்துாரிபாய் காலனியை சேர்ந்தவர் முத்துராமன், 55; ரவுடி. இவர், கொலை வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் இருந்தபோது, விருதுநகர் மாவட்டம், சூலக்கரையை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
சிறையில் இருந்து வந்த முத்துராமன், சிறை நண்பரை பார்க்க, நேற்று காலை சூலக்கரை வந்தார். அப்போது முத்துராமனை பின்தொடர்ந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்து தப்பியது. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
