ADDED : மார் 23, 2026 07:18 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: வெம்பக்கோட்டை மடத்துபட்டியில் நேற்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக ஆலங்குளத்தில் இருந்து தாயில்பட்டி நோக்கி உதயராஜ் 50, ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் ஆவணம் இன்றி ரூ.93,500 கொண்டு வந்தது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்து சாத்துார் தாசில்தார் வடிவேலிடம் ஒப்படைத்தனர்.
வெம்பக்கோட்டை செவல்பட்டியில் காரில் வந்த செவல்பட்டி மணிகண்டன் 35, ஆவணம் இன்றி ரூ.62 ஆயிரம் கொண்டு வந்தார். பணத்தை பறிமுதல் செய்து சாத்துார் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
