ADDED : மார் 20, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி மார்ச் 20-: திருச்சுழி பொம்மகோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் வினோத்குமார் டூவீலரில் வந்தார்.
மறித்து சோதனை செய்ததில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 640 ஐ பறிமுதல் செய்தனர். திருச்சுழி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
