/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிதி நிறுவனத்தில் ரூ.18 லட்சம் கையாடல்: மேலாளர் மீது வழக்கு மேலாளர் மீது வழக்கு

ADDED : அக் 10, 2024 02:19 AM
சிவகாசி:சிவகாசி அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் சிவாஜி கணேசன் காலனியை சேர்ந்தவர் வெள்ளத்துரை பாண்டியன் 47. இவர் மதுரா பைனான்ஸ் என்ற பெயரில் பழைய, புதிய டூவீலர்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரின் பைனான்ஸ் நிறுவனத்தின் ஆலங்குளம் கிளையில் திருத்தங்கல் மாரிமணியார் சந்து பகுதியை சேர்ந்த அருண் 32, மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் வாடிக்கையாளர்கள் செலுத்திய மாதத் தவணைத் தொகை ரூ.18 லட்சத்தைகையாடல் செய்தார். இது குறித்து அவரிடம் வெள்ளத்துரை பாண்டியன் கேட்டபோது, கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டு இரண்டு மாதத்திற்குள் பணத்தை திருப்பி செலுத்துவதாக அருண் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை தராமல் வெள்ளத்துரை பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலாளர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.