ADDED : ஏப் 10, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் சிவகாசி மெயின் ரோட்டில் அனுப்பங்குளம் அருகே புள்ளியியல் துறை ஆய்வாளர் ஜக்கம்மாள் தலைமையில் தேர்தல் நிலை குழு அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மதியம் 3:30 மணிக்கு சிவகாசியை சேர்ந்த மகேந்திர குமார், 40. டூவீலரில் கோவில்பட்டியில் இருந்து சிவகாசி சென்றார்.அவரது டூவீலரை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ 2.60லட்சம் இருப்பது தெரிய வந்தது.
தேர்தல் நிலை குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
