ADDED : ஏப் 11, 2026 08:39 PM
சாத்துார்:சாத்துார் சிவகாசி ரோட்டில் கோணம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் செல்வி சூர்யா தலைமையில் தேர்தல் பறக்குபடை அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது இருக்கன்குடியில் இருந்து சிவகாசி பள்ளப்பட்டிக்கு சென்ற பள்ளப்பட்டி மாரிமுத்து, 45.டூவீலரில் 2 லட்சத்து 72 ஆயிரம் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
*சாத்துார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் ஏழாயிரம் பண்ணை நடுச்சத்திரம் விலக்கு அருகில் வாகனத்தணிக்கை செய்தனர். அப்போது புல்லக்கவுண்டன்பட்டியில் இருந்து கழுகுமலை சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது கழுகு மலை மணிகண்டன் 35. உரிய ஆவணம் இன்றி 98, 230 கொண்டு வந்தது தெரிய வந்தது .தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.
