/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளர், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீளப்பணியிடம் வழங்குவது, ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லியாகத் அலி, மாநில பொருளாளர் புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர்.