/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரக வளர்ச்சித்துறை ஆயத்த மாநாடு
/
ஊரக வளர்ச்சித்துறை ஆயத்த மாநாடு
ADDED : நவ 11, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் காத்திருப்பு போராட்டத்திற்கான தென் மண்டல ஆயத்த மாநாடு மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமையில் நடந்தது.
குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.8ல் சென்னை பனகல் மாளிகையில் உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மாநில பொது செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

