/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம்: தரமான சாதனங்களை பயன்படுத்த அறிவுரை
/
மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம்: தரமான சாதனங்களை பயன்படுத்த அறிவுரை
மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம்: தரமான சாதனங்களை பயன்படுத்த அறிவுரை
மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம்: தரமான சாதனங்களை பயன்படுத்த அறிவுரை
ADDED : அக் 07, 2024 04:49 AM
மக்கள் மின்கம்பத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு வரும் சர்வீஸ் ஒயர் தொய்வாக இருந்தாலோ, சேதமடைந்து இருந்தாலோ அதை மாற்றியமைக்க உடனடியாக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இரும்பு பைப்புகளில் சர்வீஸ் வயரை கட்டி எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். தெருக்களில் இரும்பு பைப்களை நிறுவி சர்வீஸ் ஒயர்களை கட்டி எடுத்து செல்லப்பட்டிருப்பின் அவற்றை மாற்றியமைக்க சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மழையாலும், பலத்த காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது குறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து வேறு நபர்கள் யாரும் தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு அவசர தேவைகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் மின்னகம் - 94987 94987 என்ற எண்ணிலோ அல்லது அப்பகுதி பிரிவு பொறியாளரின் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்கள் மீது விளம்பர பலகைகளை கட்டக் கூடாது. மின்சார கம்பத்தில் கொடி கட்டி துணி காய வைப்பது கூடாது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு அதாவது எர்த் பைப் போடுவதுடன் அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மக்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தி மின் கசிவு மின் விபத்துக்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
மின் கசிவுகளை கண்டறிந்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விபத்துக்களை தடுக்க உதவும் கருவியான ஆர்.சி.டி.,யை வீடு, கடை, கோயில், பள்ளிகளில் பொருத்த வேண்டும். மக்கள் தங்கள் நலன் கருதியும், மழைக்காலம் துவங்க உள்ளதாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.