நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி தொழில் நிறுவன தொடர்பு அமைப்பு, தொழில் முனைவோர் கண்டு பிடிப்பு, தொழில் மேம்பாட்டு மையம் சார்பில் மாணவிகளின் பொங்கல் விற்பனை கண்காட்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியத்தாய் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிவகாசி பிரீத்தி டிசைனர் நிறுவனம் உரிமையாளர் ரேணுகாதேவி கலந்து கொண்டார். கல்லுாரி தொழில் முனைவு குழு மாணவிகள் கைவண்ணத்தில் உருவான கலைப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள், அலங்கார பொருட்கள், உணவு வகைகள், ஆடைகள், பொங்கல் பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்திருந்தனர்.
பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று பொருட்கள் வாங்கினர்.

