/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் விற்பனை... அதிகரிப்பு
/
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் விற்பனை... அதிகரிப்பு
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் விற்பனை... அதிகரிப்பு
அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் விற்பனை... அதிகரிப்பு
ADDED : செப் 09, 2025 03:36 AM

சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளோடு வீட்டடி மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்று அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளின் விலைகள் அதிகம் என்பதால் நடுத்தர ஏழை மக்கள் விலை மலிவாக உள்ள வீட்டு மனைகளை வாங்குவதற்காக நில தரகர்களை அணுகி வருகின்றனர்.
கடந்த காலங்களில் போதுமான மழை பெய்யாதால் தரிசாக போடப்பட்ட நிலங்களை விலைக்கு வாங்கி தனியார் சிலர் பிளாட்டுகளாக நிலத்தைப் பிரித்து உரிய அங்கீகாரம் பெறாமல் மனைகள் விற்று வருகின்றனர். சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் சடையம்பட்டி உப்பத்துார் ஒ. கோவில்பட்டி வெங்கடாசலபுரம் வீரபாண்டியபுரம் மேட்டமலை ரெங்கப்பநாயக்கன்பட்டி ஒ.மேட்டுப் பட்டி பகுதிகளில் இதுபோன்று முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் ரோடு வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதை அறிந்து பல ஊராட்சி நிர்வாகங்கள் அங்கீகாரம் பெறாத மனைகள் முன்பு இந்த வீட்டு மனைகள் ஊராட்சியில் உரிய அங்கீகாரம் பெறவில்லை இங்கு மனைகள் வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைத்தனர். இதனால் ஏழை நடுத்தர மக்கள் அங்கீகாரம் பெறாத மனைகளை வாங்குவதை தவிர்த்தனர்.வீட்டு மனைகள் வாங்கும் பொழுது ஊராட்சி அங்கீகாரம் உள்ளதா பொதுப் பாதைக்கு மற்றும் ஊராட்சி பயன்பாட்டிற்காக பூங்கா மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கும் பள்ளிகள் அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கும் தேவையான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து மக்கள் விசாரிக்காமல் நிலங்களை வாங்கி ஏமாந்து வருகின்றனர்.
நடுத்தர மக்கள் ஏமாறுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகங்கள் அங்கீகாரம் பெற்ற மனைகள், அங்கீகாரம் பெறாத மனைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.முன்பு போல அங்கீகாரம் பெறாத மனைகள் என ஊராட்சிகளில் எச்சரிக்கை விளம்பர பலகை வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.