ADDED : மே 07, 2025 01:36 AM
விருதுநகர்: விருதுநகரில் அருப்புக்கோட்டை வேளாண் பல்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட விருதுநகர் சம்பா வத்தலின் உலகளாவிய சந்தையை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு நடந்தது.
வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் சம்பா மிளகாயின் உலகளாவிய ஊக்குவிப்புக்கான உற்பத்தி தொழில்நுட்பங்கள், அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல், மதிப்பு கூட்டுதலை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தி சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் ஏற்கனவே சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சாகுபடி பரப்பையும் உற்பத்தியையும் அதிகப்படுத்தி உள்ளது. மேலும் மாவட்டத்தில் ஆயிரம் எக்டேர் பரப்பில் சீமைக்கருவேலை மரங்களை அகற்றி அதில் சம்பா மிளகாய் பயிரிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு ஆயிரம் எக்டேர் சீமைக்கருவேலை மரங்கள் அகற்றப்பட்டு சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்படும், என்றார்.
