ADDED : ஜன 30, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நேற்று அதிகாலையில் திருப்புவனம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எதிரே வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
முடுக்கன்குளம் பச்சேரியைச் சேர்ந்த குணா 23, ஓட்டினார். சிவா 26, உடன் இருந்தார். போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்து, சோதனை செய்ததில் கலப்பையில் 5 மூடை மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதி இன்றி மணல் திருடியதாக டிராக்டர், கலப்பை மணல் மூடைகளை பறிமுதல் செய்து, இருவரையும் அ. முக்குளம் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

