/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
/
மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
ADDED : செப் 02, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் வல்லம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ், 45. வைப்பாற்றில் 2016 ஜூன் 29 ல் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியபோது ஏழாயிரம்பண்ணை போலீசார் கைது செய்தனர். அதே ஆண்டு ஜூலை 18ல் ஜாமினில் வெளியே வந்தார்.
இவ்வழக்கு சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சார்பு நீதிமன்றம் உதவி அமர்வு நீதிபதி முத்து மகாராஜன் மணல் திருடிய முத்துராஜூக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், டிராக்டர், ட்ரெய்லரை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.அரசு தரப்பு வக்கீல்முருகன் ஆஜரானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

