/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
/
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
ADDED : நவ 25, 2025 03:57 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை 2ம்சோமவாரத்தை முன்னிட்டு கோயில்களில் விஷேச வழிபாடுகள், சங்காபிஷேகம் நடந்தது.
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை 2ம் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜை நடந்தது. இதை முன்னிட்டு சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் விருதுநகர், சுற்றுவட்டார மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் கார்த்திகை இரண்டாவது திங்கட்கிழமை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் நடத்தப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது.
* அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சங்காபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

