தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின்சாரம், தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம் பக்தர்கள் அவதி

மின்சாரம், தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம் பக்தர்கள் அவதி

மின்சாரம், தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம் பக்தர்கள் அவதி


UPDATED : அக் 29, 2026 10:42 PM

ADDED : அக் 29, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:42 PM ADDED : அக் 29, 2026 10:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகம் தண்ணீர், மின்சார வசதி இல்லாமல் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குடவரை கோயிலான மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலை மாநில அறநிலையத்துறையும், மத்திய தொல்லியல் துறையும் பராமரித்து வருகின்றனர்.

இங்கு சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பிரதோஷம், பவுர்ணமி, திருக்கார்த்திகை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருவர்.

பக்தர்கள் நலன் கருதி தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ 7 .85 லடச்சத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

கட்டி 2 ஆண்டுகளான நிலையில் இன்னும் மின்சாரம், தண்ணீர் வசதி செய்யாமல் காட்சி பொருளாக உள்ளது.எனவே, தண்ணீர், மின்சார வசதி செய்து தந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us