/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2025 03:56 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம்., மற்றும் சிபிஐ., தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு சிபிஎம் நகரச் செயலாளர் பரமதயாளன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., கன்வினர் அன்புச் செல்வன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தை துவக்கி வைத்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன்: அருப்புக்கோட்டை நகராட்சியில் வேலை செய்யக்கூடிய ஒப்பந்த முறை ரத்து செய்ய வேண்டும். 2017 ல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒப்பந்த முறையில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு 638 ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இது அமல்படுத்தப்படவில்லை. சுகாதார பணியாளர்களை தனியார் மயமாக்க கூடாது., என்றார்.
* இதே கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க., சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.