ADDED : அக் 08, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பாவை மன்றம் நாட்டு நல பணித்திட்டம் பசுமை வளாக அமைப்பு சார்பாக நடந்த இந்த விழாவிற்கு முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். கல்லூரிக்கு வனச்சரக அலுவலகத்தில் இருந்து 110 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் முறைகள் அவற்றின் பயன்கள் குறித்து வனச்சரக அலுவலர் விளக்கினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீரலட்சுமி, சுந்தரமூர்த்தி, ஜெயந்தி ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.