ADDED : மார் 07, 2024 05:05 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி, கிரீன் பவுண்டேஷன் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். திருச்சுழி பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக குண்டாறு, பள்ளிமடம், ஊருணிகள், கோவில்கள், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம், சமூக ஆர்வலர் கோவிந்தராஜ், ஆசிரியர் குருசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
