ADDED : ஜன 18, 2026 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் போலீஸ் எஸ்.ஐ., அருண்குமார், 31. மனைவி இளவரசி தற்கொலை செய்த நிலையில் அவரை டி.ஐ.ஜி. அபிநவ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சாத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணி புரிந்து வந்தவர் அருண்குமார், இவர் மனைவி இளவரசி, 26. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2025 டிச. 12ல் சாத்துாரில் கவர்னர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.ஐ., மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு சென்ற போது அவர் மனைவி இளவரசி துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
சாத்துார் போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் விருதுநகர் எஸ்.பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மதுரை டி .ஐ. ஜி அபிநவ் குமார் எஸ் .ஐ., அருண்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

